பிரித்தானியாவில் எந்த நிமிடத்திலும் உடையும் அபாயத்தில் இருக்கும் அணை :1000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
Derbyshire-யில் இருக்கும் Toddbrook என்ற அணை எந்த நிமிடத்திலும் உடைந்து பல மில்லியன் டன் தண்ணீர், ஒரு நகரையே கபளீகரம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அணைக்கு அருகிலுள்ள Whaley Bridge என்னும் நகரைச் சேர்ந்த மக்கள் பொலிசாரால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பின், தங்கள் வீடுகள் என்ன ஆகுமோ என்ற கவலையுடன் தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், ஒரு குடும்பத்துக்கு ஒருவர், தங்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்று தாங்கள் விட்டு வந்த முக்கியமான பொருட்கள், செல்லப்பிராணிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அது அபாயமானதுதான் என்றும், ரிஸ்க் எடுத்துத்தான் அங்கு சென்று பொருட்களை எடுத்து வரவேண்டியிருக்கும் என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்று, அணையின் சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி, அணை உடையாமல் காக்க முயன்று வருகிறது.
19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த அணை, முந்தைய நாள் மாலையில் கொட்டித்தீர்த்த மழையில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் எந்த நிமிடத்திலும் உடையும் அபாயத்தில் இருக்கும் அணை :1000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
Reviewed by Author
on
August 03, 2019
Rating:

No comments:
Post a Comment