பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு!
பொலிவியா நாட்டில் மருத்துவர்கள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். பொலிவியாவின் அப்போலோ பகுதியில் ஒரு பேருந்து மருத்துவர்கள் பலருடன் பயணித்துக் கொண்டிருந்தது.
லா பாஸ் பகுதியில் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த மருத்துவர்கள் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 11 பெண்கள், 3 ஆண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிவியாவில் வீதி பராமரிப்பு மோசமாக உள்ளதால், தொடர்ந்து அங்கு வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு!
Reviewed by Author
on
August 07, 2019
Rating:

No comments:
Post a Comment