18 வயது இளைஞனின் உயிரை பறித்த பேஸ்புக் காதல் -
திருகோணமலை - வான்எல பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வான் - எல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய என்.டபிள்யூ.அமில நிரோசன் என தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியை இளைஞன் பேஸ்புக் மூலமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் குறுந்தகவல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்த இருவருக்குமிடையில் நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த இளைஞன் தனது அறையில் வைத்து தற்கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 வயது இளைஞனின் உயிரை பறித்த பேஸ்புக் காதல் -
Reviewed by Author
on
August 27, 2019
Rating:

No comments:
Post a Comment