250 கோல்கள்.. முடிவுக்கு வந்த வீரரின் 21 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கை!
40 வயதாகும் ஃபோர்லான், தனது 21 ஆண்டு கால்பந்து வாழ்க்கையில் 250 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில், உருகுவே அணி அரையிறுதி வரை முன்னேற முக்கிய காரணமாக அமைந்தார். அந்த தொடரில் 5 கோல்கள் அடித்து தங்கப் பந்து விருதை வென்றார்.
அதேபோல் 2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் உருகுவே கோப்பையை வென்றது. பெரு அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஃபோர்லான் இரண்டு கோல்கள் அடித்தார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இவர் விளையாடியபோது, பிரீமியர் லீக் மற்றும் எப்.ஏ கோப்பைகளை அந்த அணி வென்றது. அத்துடன் யூரோபா கோப்பையை அத்லெடிகோ மாட்ரிட் அணி வெல்லவும் உதவியாக இருந்து, இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

அதன் பின்னர், 2016ஆம் ஆண்டு நடந்த ஐ.எஸ்.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார் ஃபோர்லான். கடைசியாக ஹாங்காங் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய ஃபோர்லான், தற்போது அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நல்ல நினைவுகளுடன் அழகான இந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த சவால்கள் தொடங்குகின்றன’ என தெரிவித்துள்ளார்.



250 கோல்கள்.. முடிவுக்கு வந்த வீரரின் 21 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கை!
Reviewed by Author
on
August 09, 2019
Rating:
No comments:
Post a Comment