மன்னாரில் மது போதையில் மோட்டர் சைக்கிள் செலுத்திச் சென்ற ஐந்து நபர்களுக்கு தலா 25000 ரூபா அபராதம்.
மது போதையில் மோட்டர் சைக்கிள் ஓடிய ஐந்து நபர்களுக்கு தலா இருபத்தையாயிரம் அபராதம் விதித்தார் மன்னார் மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா
மது அருந்திய நிலையில் மோட்டர் சைக்கிள் ஓடியவர்களை கைது செய்த பொலிசார்
திங்கள் கிழமை (19.08.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி
மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது ஐந்து பேருக்கு தலா இருபத்தையாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.
அத்துடன் இன்னொரு நபர் மது போதையிலும் சாரதிக்கான அனுமதிப் பத்திரம் இன்றி மோட்டர் சைக்கிள் செலுத்திச் சென்றமைக்காக அவ் நபருக்கு
ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
இதே தினம் இன்னொரு நபர் மது போதையிலும் அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றம் தொடர்பாக பொலிசார் வழக்கு தாக்கல் செய்த பொழுது அவ் நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு
நபர்களின் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரனைக்காக பிறிதொரு திகதியில் இவ் வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
மேலும் அனுமதிப் பத்திரம் இன்றி ரிப்பர் மற்றும் லொரியில் மணல் எடுத்துச்
சென்ற நான்கு நபர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா மன்னார் மாவட்ட நீதவான்
நீதிமன்றில் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் அனுமதி பத்திரம் இன்றி உழவு இயந்திரப் பெட்டியில் மணல் ஏற்றிய
நபர் ஒருவருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Reviewed by NEWMANNAR
on
August 21, 2019
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 21, 2019
Rating:

No comments:
Post a Comment