40 வருடங்கள் நீரில் இருக்கப்போகும் அத்தி வரதர்....
அத்தி வரதர் வைபவம் நடப்பதற்கு சில நாட்கள் முன், திருக்கோயிலை சேர்த்த ஒரு வைஷ்ணவ பெரியவர் சொல்லியிருந்தார்.
"அனந்த சரஸ் குளத்து நீர் முழுவதையும் வெளியேற்றி பெருமாளை வெளியே எடுப்போம், பிறகு நாற்பத்தியெட்டு நாட்கள் கழித்து வைக்கும் போது மழை நீர் வந்து தானாகவே குளம் நிறையும்".
தானாக குளம் எப்படி நிரம்பும், மழை எப்படி வரும் என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.
இதோ இன்று அத்தி வரதர் வைபவம் முடிந்து, அனந்த சரஸ் திருக்குளம் செல்ல ஏற்பாடு நடைபெறும் வேளையில் நல்ல மழை. குளத்திற்கு சென்றதும் வரலாறு காணாத மழை, இதில் அதிசயம் என்னவென்றால் வானிலை மைய அதிகாரிகளே விழி பிதுங்கி நிற்கின்றர்கள் புயல் இல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்படி இவ்வளவு மழை பெய்கிறது எந்த காலத்திலும் இறை சக்தியை மிஞ்ச எந்த சக்தியும் இல்லவே இல்லை என்பது ஆனித்தனமாக நிருபனம்.....
ஒன்றா இரண்டா அத்தி வரதர் புகழ் பாட ! சொல்லி மாளாது இந்த ஆன்மீக அனுபவங்களையும், மிக ஆச்சரியமான சம்பவங்களையும்.
ஆச்சார அனுஷ்டானங்கள் சரியாக நடக்கும் பொழுது, நடப்பவை எல்லாம் சரியாகவே நடக்கும் என்பது இந்து தர்ம கோட்பாடு.
40 வருடங்கள் நீரில் இருக்கப்போகும் அத்தி வரதர்....
Reviewed by Author
on
August 19, 2019
Rating:

No comments:
Post a Comment