மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில் புலமைப்பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்-
மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 04 08 2019 தரம் 05 புலமைப்பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நாடு முழுவதுமாக 03இலட்சத்து 39ஆயிரத்து 369மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.. 2ஆயிரத்தி 995 பரீட்சை நிலையங்களிலும் 497 இணைப்பு நிலையங்களிலும் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்......
- பரீட்சை மண்டபத்திற்கு நேரத்திற்கு செல்லுங்கள்
- காலை 09 மணிக்கு முன் தமது இருக்கையில் இருக்கவேண்டும்
- பரீட்சை எழுதுவதற்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்லல்
- காலையில் நல்ல உணவினை சாப்பிட்டு விட்டு வ்ருதல்(பசியோடு இருந்தால் பரீட்சை எழுத முடியாது)
- பரீட்சை பரிசோதகர் சொல்லுகின்ற அறிவுறுத்தல்களை செவிமடுத்தல் விளங்கி கொள்ளுதல்.
- பரீட்சை வினாத்தாளை நன்கு வாசித்தல் விளங்கிக் கொள்ளுதல்
- தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவதுடன் தெரியாத வினாக்களினை மீண்டும் மீண்டும் வாசித்து விடை எழுதுதல் முயற்ச்சி செய்தல்.
- வினாத்தாள்களில் ஒவ்வொன்றிலும் பரீட்சை சுட்டெண்ணை சரியாக தெளிவான முறையில் எழுதுதல் வேண்டும்.
பயமின்றி கலக்கமோ குழப்பமோ இன்றி வினாவினை வாசித்து விடை எழுதுங்கள் வெற்றி உங்களுக்கே....
பெற்றோர்கள் கவனத்திற்கு..........
- பிள்ளைகளை நேரத்திற்கு பரீட்சைக்கு அனுப்புதல்
- காலையில் பிள்ளைக்கு நல்ல உணவினை சாப்பிடக்கொடுத்தல்
- பிள்ளையின் பயத்தினையும் குழப்பத்தினையும் போக்குதல்
- நல்ல கருத்துக்களை சொல்லி அனுப்புதல்
- பரீட்சைக்கு எழுதப்போகும் பிள்லையின் மனம் நோகும்படியும் குழம்பும் படியும் எந்தக்காரியத்திலும் ஈடுபடாது இருத்தல்.
- பிள்ளையின் உடல் நிலையில் மாற்றம் இருந்தால் பரீட்சை மேற்பார்வையாளரிடம் தெரியப்படுத்துதல்.
- பரீட்சை மண்டபதின் அருகிலோ வளாகத்திலோ தரித்து நிற்றல் கூடாது.
- பிள்ளைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தினையும் கொடுத்து அனுப்புதல்.
- பிள்ளை இடைவேளை நேரத்தில் உண்ணும் உணவோ குடிபானமோ கொடுத்து அனுப்புதல்.
"ஐயமின்றி பரீட்சை எழுதுங்கள்
அனைத்து மாணவர்களும் சித்திபெறுங்கள்" உங்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில் புலமைப்பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்-
Reviewed by Author
on
August 03, 2019
Rating:

No comments:
Post a Comment