அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை மாணவன்!
இந்நிலையில், தனது மகன் குறித்த தகவல்களை யாரும் அறிந்திருந்தால் தயவு செய்து தமக்கு தகவல் தரும்படி குறித்த மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெல்பேர்ன் Deakin பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைநெறியை பயின்றுவந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை முதல் குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் குறித்த இளைஞர் பற்றிய தகவல் தெரிந்தால் 9566 1555 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ன் Craigieburn பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருக்கும்போது, தான் வீட்டுக்கு செல்வதாக தொலைபேசியில் பேசிய தனது தந்தைக்கு அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இதன் பின்னரே அவர் காணாமல் போயிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை மாணவன்!
Reviewed by Author
on
August 02, 2019
Rating:

No comments:
Post a Comment