ஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் மரணம் -
ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பெண்ணொருவர் சிசிக்சை பெற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
வீதி விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூரைச் சேர்ந்த சத்தியா செல்வரஞ்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 29ம் திகதி அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சத்தியாவின் 11 வயதான ஸ்மிநாத் செல்வரஞ்சன் உயிரிழந்தார்.
ஜேர்மனியிலிருந்து குடும்பமாக தாயகம் வந்த நிலையில், யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது கோர விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் மரணம் -
Reviewed by Author
on
August 20, 2019
Rating:

No comments:
Post a Comment