இலங்கையில் கொட்டிக் கிடக்கும் தங்கம் -
இலங்கையில் பல பகுதிகளில் தங்கம் உட்பட பல கனிம வளங்கள் நிறைந்திருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
தங்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் போர் முடிவடைந்த பின்னர், எல்லை கிராமங்களின் கனிம வளங்களை ஆராய்வதற்காக முதலீட்டு சபை (BOI) வெளிநாட்டு முதலீட்டைப் பெற்று வருவதாக பணியக இயக்குனர் ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தங்க ஆய்வுக்காக சேருவில, மத்துகம, பெலவத்த போன்ற பகுதிகளில் வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கப்பட்ட ஆய்வு அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இது போன்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், ஆய்வுகள் மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய காலத்திலிருந்தே இலங்கையில் தங்க அகழ்வுக்கான அனுமதிகளை அரசாங்கம் வழங்கி வருகிறது.
1990 ஆம் ஆண்டில் எம்பிலிப்பிட்டியவிற்கு அருகிலுள்ள பகுதியிலும், 2012 இல் களனி ஆற்றிலும் தங்க அகழ்வு செய்வதற்கு சுமார் 200 அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த உரிமங்கள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் மேற்பார்வையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொட்டிக் கிடக்கும் தங்கம் -
Reviewed by Author
on
August 03, 2019
Rating:

No comments:
Post a Comment