மன்னாரில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அணுஸ்டிக்க ஏற்பாடு....
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமானது எதிர்வரும் 30 ந் திகதி (30.08.2019) வெள்ளிக் கிழமை நினைவு கூறப்படுகின்றது.
இவ் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இவ் தினம் மன்னாரிலும் அனுஸ்டிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்தோடு மன்னார் பிரஜைகள் குழுவும் மன்னார் மாவட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களின் அனுசரனையுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இணைந்து செயல்பட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதாவது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல்
கைதிகளை விடுதலையை வலியுறுத்தியும் இவ் செயற்பாடமுன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30.08.2019 வெள்ளிக் கிழமை அன்று நடைபெற இருக்கும் இவ் கவனயீர்ப்பு
பேரணியானது மன்னார் பாலத்தடியிலிருந்து காலை 7.30 மணியளவில்
ஆரம்பிக்கப்பட்டு மன்னார் நகர சபையை வந்தடைந்து அங்கு ஒன்று கூடலுடன் நிறைவுபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அணுஸ்டிக்க ஏற்பாடு....
Reviewed by Author
on
August 29, 2019
Rating:

No comments:
Post a Comment