மன்னார் முருங்கன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை கட்டிடம் திறந்து வைப்பு-படம்
வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 11 உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துவதற்காக நானாட்டான் பிரதேச சபையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அதற்கு இணங்க உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துகின்ற நிறுவனமான ஆசிய பவுண்டேஸன் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் , நானாட்டான் பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடனும் முருங்கன் நகர் பகுதியின் நீண்ட நாள் மக்களின் குறைபாடாக காணப்பட்ட பொதுச்சந்தை தேவையை இந் நிதியினூடாக கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் நேற்று சனிக்கிழமை மாலை 03-08-2019 வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, பிரதேச சபையின் செயலாளர், உறுப்பினர்கள் , இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
குறித்த சந்தை கட்டிடம் குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
முருங்கன் வர்த்தக சங்க செயலாளர் ,வர்த்தக சங்க பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். குறிப்பாக இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கோடு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
August 04, 2019
Rating:
Reviewed by Author
on
August 04, 2019
Rating:

No comments:
Post a Comment