மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக ரீ.ரமேஸ் தெரிவு
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக ரீ.ரமேஸ் இன்று சனிக்கிழமை(24) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தெரிவுகள் இன்று சனிக்கிழமை(24) காலை மன்னார் எழுத்தூர் ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது வருடாந்த பொதுக்கூட்டம் இடம் பெற்றதோடு,புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக ரீ.ரமேஸ் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து செயலாளராக கே.கேதுஜன், பொருளாளராக ஜீ.எலியாஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு,நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யுத்த காலங்களிலும் அதற்கு பிற்பட்ட காலங்களிலும் மன்னார் மாவட்ட தனியார் போக்கு வரத்து சங்கத் தலைவராக இருந்து மன்னார் மக்களுக்கு சிறப்பான பேருந்து சேவையை வழங்கி வந்த ரீ.ரமேஸ் மீண்டும் சங்க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதி கூடிய வாக்குகளைப் பெற்று மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(24-08-2019)
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தெரிவுகள் இன்று சனிக்கிழமை(24) காலை மன்னார் எழுத்தூர் ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது வருடாந்த பொதுக்கூட்டம் இடம் பெற்றதோடு,புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக ரீ.ரமேஸ் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

யுத்த காலங்களிலும் அதற்கு பிற்பட்ட காலங்களிலும் மன்னார் மாவட்ட தனியார் போக்கு வரத்து சங்கத் தலைவராக இருந்து மன்னார் மக்களுக்கு சிறப்பான பேருந்து சேவையை வழங்கி வந்த ரீ.ரமேஸ் மீண்டும் சங்க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதி கூடிய வாக்குகளைப் பெற்று மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(24-08-2019)
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக ரீ.ரமேஸ் தெரிவு
Reviewed by NEWMANNAR
on
August 25, 2019
Rating:

No comments:
Post a Comment