வடக்கின் வீதி விபத்துக்களை குறைப்பது எப்படி? வடக்கு ஆளுநரைச் சந்தித்துப் பேசிய உறுப்பினர்கள்
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை (National Council For Road Safety ) மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் (Northern Province Road Safety Council) உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
ஆளுநர் செயலகத்தில் இச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த இரண்டு சபைகளும் இணைந்து எவ்வாறு செயற்படுதல் மற்றும் மக்களிடையே விபத்துக்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கின் வீதி விபத்துக்களை குறைப்பது எப்படி? வடக்கு ஆளுநரைச் சந்தித்துப் பேசிய உறுப்பினர்கள்
Reviewed by Author
on
August 03, 2019
Rating:

No comments:
Post a Comment