ஒளி பிறந்தது........
ஒளி பிறந்தது........
ஒரு மாலை நிறைவுறும் வேளை எவ்வாறு அந்நேரம் காட்சியளிக்கும் சூரியன் மெல்ல மெல்ல மறைவான் பறவைகள் தமது கூடுகளுக்கும் விலங்குகள் தமது இருப்பிடத்திற்கும் மனிதர்கள் தமது இல்லங்களுக்கும் சென்றடைவார்கள்……
ஒளிதனை மெல்ல மெல்ல இருள் சூழ்ந்து கொள்ளும் அந்த இருளை அகற்றுவதற்காகவே விளக்கை ஏற்றுகின்றோம் இக்காலத்தில் தெறியை அழுத்தி மின்குமிழைப்போடுகின்றோம்…எதற்காக ஒளியைப்பெறுவதற்காக….
பெற்றும்கொள்வோம் அது நிரந்தரமில்லையே….விளக்கு அனைந்தாலோ…மின்சாரம் இல்லாமல் போனாலோ….மீண்டும் இருள் சூழ்ந்து கொள்ளும். நிரந்தரமான உண்மையான புனிதமான ஒளி எது அது யார்….?
இந்தக்கேள்வி கஐனுக்கு எழுகின்றது….
சிந்திக்கின்றான் அவன் சிந்தனையில் மனித வாழ்வுக்காய் மரணித்த இயேசுகிறிஸ்த்து உயிர்த்தெழுந்தது போன்று பொறியாக தெறித்தது….
கேள்விக்கு விடையைக்கண்டவன் இதனுடைய விளக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக தனது தாத்தாவை நாடுகிறான்…தாத்தா தினமும் கோயில் கடமைகளில் ஈடுபடுபவர் எந்நேரமும் விவிலியமும் கையுமாகத்தான் இருப்பார்…..
அவர் அருகில் சென்று எனது சந்தேகத்தை கேள்வியாக்கி தாத்தா ஒளி பிறந்தது என்று சொல்கின்றார்களே அது எவ்வாறு நடைமுறையில் இருக்கும் என்றதும்…
என்னை உற்றுப்பார்த்த தாத்தா சொன்னார் ஒளி பிறந்தது என்று சிரித்தார்.... எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன தாத்தா சொல்கிறீர்கள் என்றேன் இக்கேள்வி உனக்குள் எழுவதற்கு காரணமே உனது இதயத்தில் ஒளி பிறந்து விட்டது என்பதைக்காட்டுகின்றதே…….
-வை.கஜேந்திரன்-
ஒளி பிறந்தது........
Reviewed by Author
on
August 10, 2019
Rating:

No comments:
Post a Comment