ஜனாதிபதியின் நியமனத்தால் அதிர்ச்சியில் தமிழர்கள்! சுமந்திரன்
சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை தமிழ் மக்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்று காலை தனது நியமன கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் டுவிட்டரில் இட்டுள்ள பதிவிலேயே சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் பதிவில்,
இறுதி கட்ட போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி நியமித்தமை தமிழ் மக்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் செயற்பாடாகும்.
இந்த நியமனத்தினால் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து நாங்கள் அதிருப்தியை தெரிவிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் நியமனத்தால் அதிர்ச்சியில் தமிழர்கள்! சுமந்திரன்
Reviewed by Author
on
August 19, 2019
Rating:

No comments:
Post a Comment