சிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திரையிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.
வரும் 8ஆம் திகதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கி பல அரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்து அநுமதிச்சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி என்று சொல்லப்படும் பிரத்யேகத் திரையிடல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நடைபெறுகின்றது.
சிங்கப்பூரில் இன்று ஆரம்பமாகும் திரையிடலில் பங்கேற்க படத்தில் நடித்திருக்கும் வித்யா பாலன், ஷ்ரத்தா ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
இந்தத் திரையிடல் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், ”சிங்கப்பூரில் இன்று ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி திரையிடல் ஆரம்பிக்கின்றது. எனது மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார், எச் வினோத், ஒட்டுமொத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இதை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வேன்” என பதிவிட்டுள்ளார்.
எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆண்ட்ரியா, அபிராமி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி
Reviewed by Author
on
August 07, 2019
Rating:
Reviewed by Author
on
August 07, 2019
Rating:


No comments:
Post a Comment