கூட்டமைப்பு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் -
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பில் தெளிவூட்டும் நடவடிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் இன்று தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன.
அண்மைக்காலமாக முகப்புத்தகங்கள் வாயிலாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்.கே.சுமந்திரன் பங்குகொள்ளும் நிகழ்வொன்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு நடைபெறவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில், நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் -
Reviewed by Author
on
August 09, 2019
Rating:

No comments:
Post a Comment