மாதம் வெறும் 1500 ரூபாய் சம்பாதித்த பெண்... ஒரே நாளில் இன்று கோடீஸ்வரியாக மாறிய அதிர்ஷ்டம்! எப்படி தெரியுமா? -
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அமராவதி பகுதியைச் சேர்ந்தவர் பபிதா. இவர் அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரின் மாத வருமானம் 1500 ரூபாய் மட்டுமே, இவருக்கு பள்ளி மாணவர்கள் தான் உலகம், ஏனெனில் காலை 9 மணிக்கு சென்று மாலை 4 மணிக்கு தான் திரும்புவார்.
குறிப்பாக பபிதா சமைக்கும் கிச்சடி, அந்த பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும், இதன் காரணமாகவே அவர் தனக்கு வரும் வருமானத்தைப் பற்றி நினைக்காமல், மாணவர்களுக்கு சமைத்து போட்டு, மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்படி மாதம் 1500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர், தற்போது கோடீஸ்வரியாக மாறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் தான் தொகுப்பாளர்.
தற்போது 1 கோடி ரூபாய் வென்றிருக்கும் பபிதா, இது குறித்து கூறுகையில், குழந்தைகளுக்கு உணவு சமைப்பதன் மூலம் எனக்கு கிடைக்கும் 1,500 ரூபாய் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாதபோதும், அதை நான் ஒரு மனநிறைவுடன் செய்து வந்தேன்.
நான் பள்ளிப்படிப்பைத்தான் முடித்திருக்கிறேன். ஆனால், நிறைய தகவல்களைப் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் மூலமாகத் தெரிந்துகொள்வேன்.
எப்போதும் யாருக்காவது வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றம் நிகழும், அது போன்று தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு நம்பி விண்ணப்பித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்போன்தான் இருக்கிறது.
போட்டியில் ஜெயிப்பதன் மூலமாக எல்லோருக்கும் தனித்தனி செல்போன் வாங்கிக்கொடுக்கணும் என்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது
இது எதிர்பார்க்காத ஒன்று, சினிமாவில் நடப்பது போன்று தான் என் வாழ்க்கையிலும் இப்போது ஆச்சரியம் நடந்திருக்கிறது.
நிகழ்ச்சியில் கேட்ட எல்லா கேள்விகளும் என் வாழ்க்கையில் கடந்து வந்த சில சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டிருந்ததால், என்னால் வெற்றிபெற முடிந்தது. நிச்சயம் இந்தத் தொகையைப் பயனுள்ள வகையில் செலவழிப்பேன். சத்துணவு சமைக்கும் பணியைத் தொடர்ந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.
மாதம் வெறும் 1500 ரூபாய் சம்பாதித்த பெண்... ஒரே நாளில் இன்று கோடீஸ்வரியாக மாறிய அதிர்ஷ்டம்! எப்படி தெரியுமா? -
Reviewed by Author
on
September 17, 2019
Rating:
Reviewed by Author
on
September 17, 2019
Rating:


No comments:
Post a Comment