மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் 5ஜீ தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு. மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு-(PHOTOS,LETTER)
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, குறித்த கிராமத்தில் அமைக்கப்படவுள்ள குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை உடன் நிறுத்த கோரி பள்ளிமுனை கிராம மக்கள் இன்று சனிக்கிழமை14/09/2019 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளிமுனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் (ரவர்) அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்து செய்து உள்ளனர்.
இதனால் எமது பகுதியில் வாழும் சிறுவர்கள்,முதியவர்கள் , நோய் வாய்ப்பட்டவர்கள் பாதீப்படையும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த 5 ஜீ தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதினால் 5 ஜீ காந்த கதிர் வீச்சினால் சரும நோய்கள்,புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் குறித்த கோபுரத்தில் கமரா பொருத்துவதினால் எங்களுடைய தனிப்பட்ட அன்றாட வாழ்க்கை செயற்பாடுகள் பாதீப்படையவும் வாய்ப்புக்கள் உள்ளது.சுற்றுப்புறச் சூழல் இதனால் பாதீக்கப்படுகின்றது.
குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு சுற்றுச் சூழல் அதிகார சபையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
மேலும் அச்சூழலில் வாழும் மக்களின் சம்மதம் கூட பெறப்படவில்லை.
இனவே குறித்த 5 ஜீ தொலைத் தொடர்பு கோபுரத்தை எமது பகுதியில் அமைப்பதற்கு பள்ளிமுனை கிராம மக்களாகிய நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம்.
எனவே இதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை இன்று சனிக்கிழமை14/09/2019 காலை 6 மணியளவில் குறித்த பகுதியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொன் பகுதியில் இருந்து சிலர் வருகை தந்த போதும் மக்களின் எதிர்ப்பபை தொடர்ந்து குறித்த பணிகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
September 14, 2019
Rating:
Reviewed by Author
on
September 14, 2019
Rating:

No comments:
Post a Comment