இலங்கையில் பல மில்லியன் ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய குளம்!
பலங்கொட பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க சுண்ணாம்பு குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரக்வக்க காட்டுப் பகுதியில் இந்த குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குளத்தினை பார்வையிடக் கூடிய வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரையில் எவரும் அங்கு செல்ல கூடாது என பாதுகாப்புத் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கையை மீறி காட்டுக்குள் நுழைவோரை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுண்ணாப்பு குளம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதனை பார்வையிட பெருமளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும் அனுமதியின்றி நுழைவதனால் பாரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் முழுவதும் சுண்ணாம்பு கற்கள் உள்ளதாகவும், அந்த பகுதிகளில் மேலும் சில சுண்ணாம்பு குளங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. அனுமதியின்றி அங்கு நுழைந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சமூக வலைத்தளங்ளில் வெளியிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக மில்லியன் கணக்கான வருடங்கள் பழமையானதென கருதப்படும் இந்த சுண்ணாம்பு குளத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பல மில்லியன் ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய குளம்!
Reviewed by Author
on
September 09, 2019
Rating:

No comments:
Post a Comment