பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மறைவை தலைப்பு செய்தியாக்கிய ஜப்பான் பத்திரிகைகள்!
அப்படி அவருக்கும் ஜப்பானுக்கும் என்ன உறவு? Chiracக்கு சுமோ மல்யுத்தம் என்றால் மிகவும் பிடிக்கும்.
எவ்வளவு பிடிக்கும் என்றால், தனது செல்ல நாய்க்கு அவர் சுமோ என்று பெயரிடும் அளவுக்கு பிடிக்கும்.
2005ஆம் ஆண்டு, ஜப்பானின் Osakaவிலுள்ள ஒரு சுமோ மைதானத்திலிருந்து Jacques Chirac வெளியேறும்போது, மைதானத்திலிருந்த மொத்த ஜப்பானியர்களும் சுமோ விரும்பியான அவரை எழுந்து நின்று மரியாதை செலுத்தி அனுப்பியதோடு, அரங்கம் முழுவதும் ‘Shiraku, Shiraku’ என்ற குரல்கள் முழங்கியதை யாராலும் மறக்க முடியாது.
ஜப்பான் சுமோ கூட்டமைப்பின் தலைவர் Chiracஇன் மரண செய்தி கேட்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, சுமோ மீதான அவரது அன்புக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
ஜப்பான் மக்கள் ட்விட்டரிலும் Chiracக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ‘அவர் சுமோவை நேசித்தார், இன்று ஜப்பானுக்கும் பிரான்சுக்கும் இருக்கும் நட்புறவுக்கு அவர்தான் அடித்தளமிட்டார்’ என்று கூறும் ஒரு பயனர் ’நன்றி ஜனாதிபதி Chirac அவர்களே’ என்று பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மறைவை தலைப்பு செய்தியாக்கிய ஜப்பான் பத்திரிகைகள்!
Reviewed by Author
on
September 28, 2019
Rating:

No comments:
Post a Comment