ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
ஐக்கிய தேசிய முன்னணி, சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
“பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும்பண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்ட ஐதேக கூட்டம் முடிந்தது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி, சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விரைவில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பிரதான கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால், ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக இருக்கின்ற நிலையில், அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கட்சியின் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு விரைவில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, ஐக்கிய தேசிய முன்னணி, சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Reviewed by Author
on
September 11, 2019
Rating:

No comments:
Post a Comment