2025-ல் அப்படி நடந்தால் மக்கள் வெந்து சாவார்கள்... 2 நாடுகள் சுடுகாடாக மாறும்: எந்த நாடுகள் தெரியுமா? -
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அணுஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், அடுத்த சில நாட்களில் சுமார் 12.5 கோடி மக்கள் வெந்து சாவார்கள் என நிபுணர்கள் குழு ஒன்று ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த மரண எண்ணிக்கையானது இரண்டாம் உலகப் போரில், ஆறு ஆண்டுகளில் ஏற்பட்ட மரண எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
அவ்வாறான போரானது வெடிகுண்டுகள் வீசப்படும் பகுதிகளை மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டுமின்றி அணுஆயுத போருக்கு பின்னர் உலக அளவில் காலநிலையில் கடும் மாறுதல் ஏற்படும். விவசாய நிலங்கள் பாழ்படும். மட்டுமின்றி பட்டிணிச் சாவுகள் அதிக அளவில் நிகழும்.
2025 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ வாய்ப்புகள் அதிகம் கொண்ட ஒரு போர் தொடர்பில் ஆலன் ரோபோக் என்ற நிபுனர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் தொடர்பில் தொடர்ந்து முட்டி மோதிவரும் இரு நாடுகளும், 2025 காலகட்டத்தில் 400 முதல் 500 அணுஆயுதங்களை தங்கள் பட்டியலில் சேர்த்திருப்பார்கள் என ஆலன் ரோபோக் கணித்துள்ளார்.

இரு நாடுகளால் வீசப்படும் ஒவ்வொரு அணுஆயுதமும் 7 லட்சம் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் எனவும்,
அதனால் ஏற்படும் தீ விபத்தால் கடும் வெப்பம் ஏற்படும் எனவும், கரும்புகை சில வாரங்களில் உலக நாடுகளை பாதிக்கும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மட்டுமின்றி இந்த கரும்புகையால் மழையின் அளவு 30 சதவிகிதம் வரை சரிவை சந்திக்கும் எனவும், இதனால் உலக அளவில் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கும் எனவும்,
இதன் காரணமாக பட்டிணிச் சாவுகள் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெப்பநிலை கடும் சரிவை சந்திப்பதால் பூமியில் உள்ள மிருகங்கள் மற்றும் செடி கொடிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தெற்காசியாவை மட்டுமின்றி, உலக நாடுகளையும் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-ல் அப்படி நடந்தால் மக்கள் வெந்து சாவார்கள்... 2 நாடுகள் சுடுகாடாக மாறும்: எந்த நாடுகள் தெரியுமா? -
Reviewed by Author
on
October 04, 2019
Rating:
No comments:
Post a Comment