டி-20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா -
அவுஸ்திரேலிய உடனான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது.
பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கிய 2வது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மலிங்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பாடியது, ஆரம்பத்திலே குசல் மெண்டிஸ் 1 ஓட்டத்தில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து குணதிலக (21), அவிஷ்கா பெர்னாண்டோ (17) , நிரோஷன் டிக்வெல்ல (5), குசல் ஜனித் பெரேரா (27), தசுன் சானக்க (1), வனிந்து ஹஸரங்க (10), இசுரு உதான (10), லசித் மாலிங்க (9), லக்ஷன் சந்தகன் (10) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற இலங்கை அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.
2 ஓட்டங்களுடன் நுவன் பிரதீப் ஆட்டமிழக்கவில்லை. அவுஸ்திரேலிய தரப்பில் அலெக்ஸ் பேட் கம்மின்ஸ், பில்லி ஸ்டேன்லேக், அடம் ஷம்பா, அஷ்டன் ஏகர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய களமிறங்கியது. ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கிய அணித்தலைவர் பின்ச், மலிங்கா வீசிய பந்தில் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.
இதனையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித்தும் அதிரடியாக துடுப்பாட 13 ஓவரில் வெற்றி இலங்கை எட்டி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிப்பெற்றது. வார்னர் 41 பந்தில் 9 பவுண்டரிகள் விளாசி 60 ஓட்டங்களும், ஸ்மித் 36 பந்தில் 6 பவுண்டரி விளாசி 53 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அசத்தினர்.
எனினும், இலங்கை அணி 2 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற வெற்றி கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
டி-20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா -
Reviewed by Author
on
October 31, 2019
Rating:

No comments:
Post a Comment