8000 ஜி.பி வீடியோ.....23 சிறார்கள் சிறைவைக்கப்பட்டு துஸ்பிரயோகம்...
அதில், உலகின் மிகப்பெரிய குழந்தை பாலியல் சுரண்டல் கும்பலின் நெட்வொர்க்குகளை சேதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தென் கொரிய அதிகாரிகளால் மீட்கப்பட்ட சர்வர் ஒன்றை ஆராய்ந்ததில், அந்த சர்வரை அடிப்படையாக கொண்டு இயங்கும் இணைய தளம் ஒன்றில் சுமார் ஒரு மில்லியன் பயனாளர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மட்டுமின்றி இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கா, ஸ்பெயின், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் சிறை வைக்கப்பட்டு, கொடூரமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்ட 23 சிறார்களை மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 8 terabyte அளவுக்கு சிறார் பாலியல் துஸ்பிரயோக வீடியோ காட்சிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இணையதளங்களை பிட்காயின் மூலமாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், உலகின் மிகப் பெரிய குழு ஒன்று இதன் பின்னால் இயங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் மீது இதுவரை வழக்குப் பதிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய நாட்டவரான 23 வயது இளைஞர் ஒருவர் மீது இதே விவகாரம் தொடர்பில் பல பிரிவுகளில் வாஷிங்டன் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தென் கொரியாவில் இதே குற்றச்சாட்டுக்கு கைதான இளைஞர்கள் மீது துரிதமாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மாகாணங்களான அலபாமா, ஆர்கன்சாஸ், கலிபோர்னியா, கனெக்டிகட், புளோரிடா, ஜார்ஜியா, கன்சாஸ், லூசியானா, மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நெப்ராஸ்கா, நியூ ஜெர்சி, நியூயார்க்,
வட கரோலினா, ஓஹியோ, ஓரிகான், பென்சில்வேனியா, ரோட் தீவு, தென் கரோலினா, டெக்சாஸ், உட்டா, வர்ஜீனியா, வாஷிங்டன் மாநிலம் மற்றும் வாஷிங்டன், டி.சி. உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறார் துஸ்பிரயோக காணொளிகளை பயன்படுத்தியவர்கள் மற்றும் சேமித்து வைத்திருந்தவர்கள் என 337 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி, பிரித்தானியா, தென் கொரியா, ஜேர்மனி, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், செக் குடியரசு, கனடா, அயர்லாந்து, ஸ்பெயின், பிரேசில் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சில நபர்களை பொலிசார் இதே விவகாரம் தொடர்பில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8000 ஜி.பி வீடியோ.....23 சிறார்கள் சிறைவைக்கப்பட்டு துஸ்பிரயோகம்...
Reviewed by Author
on
October 18, 2019
Rating:
Reviewed by Author
on
October 18, 2019
Rating:


No comments:
Post a Comment