மன்னார் தீவக பகுதிகளில் கடும் மழை காரணமாக 53 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் இடம் பெயர்வு....படங்கள்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்வு நில கிராமங்களான சாந்திபுரம் ஜிம்றோன் நகர் ஜீவபுரம் உட்பட பல கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை தொடக்கும் மதியம் வரை மாத்திரம் ஜீவபுரம் ஜிம்றோன் நகர் பகுதியை சேர்ந்த சுமார் 53 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
நகர சபையினால் ஒழுங்கான வடிகாலமைப்பு செய்யப்படாத நிலையில் மழை நீர் வடிந்தோட முடியாத காரணத்தினால் மக்களின் வீடுகளிலும் பாதைகளிலும் கால்வாய்களிலும் நீர் தேங்கி காணப்படுகின்றது
மக்கள் இடம் பெயர்ந்து வசிக்க கூடிய பாடசாலைகள் தேவாலயங்களிலும் நீர் நிறைந்து காணப்படுவதனால் மக்கள் செய்வதறியாத நிலையில் உள்ளனர்
தற்போது வரை இடம் பெயர்ந்துள்ள 53 குடும்பங்களையும் கிராம சேவகர் அலுவலகம் மற்றும் முன்பள்ளியில் தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமை பிரிவு மற்றும் பிரஜைகள் குழுவினர் சென்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
தொடர்சியான மழை காரணமாக சில தேசிய பாடசாலைகள் உட்பட ஆரம்ப பாடசாலைகளும் நீரினால் முழுவதும் மூழ்கியுள்ளமையினால் அவ்வாறான பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
நகர சபையினால் ஒழுங்கான வடிகாலமைப்பு செய்யப்படாத நிலையில் மழை நீர் வடிந்தோட முடியாத காரணத்தினால் மக்களின் வீடுகளிலும் பாதைகளிலும் கால்வாய்களிலும் நீர் தேங்கி காணப்படுகின்றது
மக்கள் இடம் பெயர்ந்து வசிக்க கூடிய பாடசாலைகள் தேவாலயங்களிலும் நீர் நிறைந்து காணப்படுவதனால் மக்கள் செய்வதறியாத நிலையில் உள்ளனர்
தற்போது வரை இடம் பெயர்ந்துள்ள 53 குடும்பங்களையும் கிராம சேவகர் அலுவலகம் மற்றும் முன்பள்ளியில் தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமை பிரிவு மற்றும் பிரஜைகள் குழுவினர் சென்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
தொடர்சியான மழை காரணமாக சில தேசிய பாடசாலைகள் உட்பட ஆரம்ப பாடசாலைகளும் நீரினால் முழுவதும் மூழ்கியுள்ளமையினால் அவ்வாறான பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மன்னார் தீவக பகுதிகளில் கடும் மழை காரணமாக 53 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் இடம் பெயர்வு....படங்கள்
Reviewed by Author
on
October 24, 2019
Rating:

No comments:
Post a Comment