குழந்தைகளின் இதயத்துடிப்பை அவதானிக்க ஸ்மார்ட் ஸ்பீக்கர் உருவாக்கம் -
குறித்த ஸ்பீக்கரானது குழந்தைகள் தூங்கும்போது அவர்களின் இதயத்துடிப்பு சத்தம்,சுவாசம் மற்றும் அசைவுகள் என்பவற்றினை அறிய உதவுக்கூடியதாக இருக்கின்றது.
இதனை வடிவமைத்த ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இந்தியர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
இதேவேளை BreathJunior எனும் இச் சாதனத்தினை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவே உருவாக்கியுள்ளது.
மேலும் இச் சாதனத்தைக் கொண்டு 5 குழந்தைகளை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது மற்றைய மருத்துவச் சாதனங்களைக் கொண்டு மேற்கொள்ளும்போது கிடைக்கும் பெறுபேறுகளுடன் ஒத்துப்போனதாக குறித்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் இதயத்துடிப்பை அவதானிக்க ஸ்மார்ட் ஸ்பீக்கர் உருவாக்கம் -
Reviewed by Author
on
October 22, 2019
Rating:

No comments:
Post a Comment