மன்னார் பேசாலையில் சர்வதேச சிறுவர் தின விழா- படங்கள்
மன்னார் மாவட்டத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியான பேசாலையில் இன்று செவ்வாய் கிழமை 01.10.2019 காலை சர்வதேச சிறுவர் தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இவ் தினத்தை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வாக பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் பங்கு தந்தை அருட்பணி தேவராஜா கொடுத்தோர் அடிகளார் தலைமையில் அருட்பணி ரவ்வாயல் அடிகளார், அருட்பணி ரஞ்சன் சேவியர் அடிகளார் ஆகியோர் இணைந்து சிறுவர்களுக்கான விஷேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இவ் திருப்பலியில் பேசாலை பகுதியில் இயங்கி வரும் புனித பாத்திமா
கல்லூரி, சென் மேரிஸ் பாடசாலை, விக்ரரிஸ், சென்.மேரிஸ் மற்றும் அமலதாசன் சிறுவர் பாடசாலைகளின் பல நூற்றுக் கணக்கான மாணவர்களுடன் பெற்றோர் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு சிறார்களுக்கு ஆசீர் வழங்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து பல வர்ணம் கொண்ட சீருடைகளுடன் சென்.மேரிஸ் பாடசாலை சிறார்கள் 'வடலிகள் வளர்ந்து வானுயரும் நாளை', மகிழ்வான சிறுவர் உலகை காப்பதற்காக நாம் கைகொடுப்போம்' போன்ற வாசகங்கள் ஏந்தியவாறு வீதி வலம் வந்து தங்கள் பாடசாலைக்குச் சென்று விளையாட்டு கலை நிகழ்வுகளையும் நடாத்தினர்.

Reviewed by Author
on
October 01, 2019
Rating:

No comments:
Post a Comment