யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறப்பு! முதலாவது விமானம் தரையிறங்கியது -
குறித்த பெயர்ப்பலகையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரை நீக்கம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறங்கியுள்ளது.
இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த அலைன்ஸ் எயார் நிறுவனத்தின் விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் பலாலியிலுள்ள சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வுகள் இன்று காலை பத்து மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.
இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வரவிருப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் 27ஆம் திகதி முதலே வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய நிகழ்வை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறப்பு! முதலாவது விமானம் தரையிறங்கியது -
Reviewed by Author
on
October 17, 2019
Rating:
Reviewed by Author
on
October 17, 2019
Rating:


No comments:
Post a Comment