சர்வதேச கோமாளி மாநாடு.. உற்சாக கொண்டாட்டம்!
நகைச்சுவை திறனுடன் கோமாளி வேடமிட்டு மக்களை மகிழ்விக்கும் சிலர், அதன்மூலம் கிடைக்கும் சிறிய வருவாயைக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்தி வருவது வழக்கம்.
இவர்களின் தொழிலை வளர்க்கவும், பிற நாடுகளில் இதேபோல் கோமாளி வேடமிடும் நபர்களை அறிமுகம் செய்து, தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளவும் சர்வதேச கோமாளி மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் தற்போது கோமாளி மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான கோமாளிகள் கலந்துகொண்டனர்.
இது 24வது சர்வதேச கோமாளி மாநாடு ஆகும். இவர்கள் அனைவரும் கோமாளி வேடமணிந்து, தெருக்களில் நடனமாடி மக்களை மகிழ்வித்தனர். அத்துடன் மாநாட்டிலும் கலந்துகொண்டனர்.
மெக்ஸிகோவில் மக்கள் பலர் கோமாளி வேடமிட்டு, மாயாஜால திறமையை பயன்படுத்தி குழந்தைகள், சிறுவர்கள், பெரியோர்களை மகிழ்வித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கோமாளி மாநாடு.. உற்சாக கொண்டாட்டம்!
Reviewed by Author
on
October 24, 2019
Rating:
No comments:
Post a Comment