மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர் தினம் சிறப்பாக நடைபெற்றது-படங்கள்
இம்முறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திங்கள் கிழமை கொண்டாடுவது வழமை இருப்பினும் மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையானது கடந்த சனிக்கிழமை 05/10/2019 ஆசிரியர் தினத்தினை சிறப்பாக கொண்டாடியது.
கல்லூரி முதல்வர் M.Y.மாஹிர் தலைமையில் மாணவர்கள் மற்றும் மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் பாட்சாலை மண்டபத்தில் ஆசிரியர் தினம் நடைபெற்றது.
இவ்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களால் வரவேற்கபட்டு சின்னம் சூட்டியதோடு நினைவுப்ப்ரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டது மாணவர்களால் ஆசிரியர்களின் சிறப்பு பணிச்சேவை மேன்மை என்பன வெளிப்பட பாடலாலும் கவிதையாலும் நடனத்தாலும் பேச்சாலும் தமது அன்பை வெளிப்படுத்தினர்.
ஆசிரியர்களும் தமது திறமையின் வெளிப்பாடாய் தனிப்பாடல் குழுப்பாடல்கள் பாட மாணவர்கள் தமது ஆசிரியர்களை ஒருமித்த குரலில் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
ஆசிரியர் பணியானது பணிகளில் சாலச்சிறந்த பணி அறிவூட்டும் பணி அதை திறம்பட செயலாற்ற வேண்டும் எனும் பொருள்பட கல்லூரி முதல்வர் தனதுரையில் கூறி வாழ்த்தினார்.

V.KAJENTHIRAN-
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர் தினம் சிறப்பாக நடைபெற்றது-படங்கள்
Reviewed by Author
on
October 07, 2019
Rating:

No comments:
Post a Comment