மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இளைஞர் முகாம் -படங்கள்
இளைஞர் கழகம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு தசாப்த நிறைவினை கொண்டாடும் வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால் இளைஞர்களின் இயலளவு மற்றும் ஆளுமை விருத்திக்காக தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் இளைஞர் முகாமானது
மாந்தை பிரதேச இளைஞர் கழகங்களை உள்ளடக்கி எதிர்பார்ப்பின் இளைஞர் முகாம் எனும் தொணிப்பொருளில் இடம் பெற்றது.
மந்தை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு.தர்சன் தலைமையில் மன் அடம்பன் மகாவித்தியாளயத்தில் ஆரம்பமான குறித்த இளைஞர் முகாமில் இளைஞர்களின் ஆளுமை விருத்தி உடல் ஆரோக்கியம் உளநல விருத்தி மற்றும் தொழில் பயிற்சி தொடர்பாக விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன் நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் குறித்த இளைஞர்முகாமிற்கு சிறப்பு விருதினர்களாக வன்னி மாகாண பணிப்பாளர் திரு.முனாபர் அவர்களும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.மஜித் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.பூலோகராஜ அவர்களும் மன் அடம்பன் மகாவித்தியாலய அதிபர் இலங்கை இளைஞர்கழக சம்மேளன பிரதிநிதிகளான ஜசோதரன் மற்றும் ஜோசப் நயன் அவர்களும் கலந்து கொண்டதுடன் இளைஞர் முகாம் முழுவதும் சிறப்பாக செயற்பட்ட இளைஞர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
October 06, 2019
Rating:

No comments:
Post a Comment