மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின விழாவும் விசேட கெளரவிப்பு நிகழ்வும்-படங்கள்
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வருட பூர்த்தி யூபிலி நிகழ்வை முன்னிட்டு விசேட ஆசிரியர் தின நிகழ்வும் ஆசிரியர் கெளரவிப்பு நிகழ்வும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலமையில் இன்று காலை 10 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
கடந்த காலத்தை நன்றி உணர்வுடன் நினைவு கூறுவோம் எனும் தொணிப்பொருளில் 2019 ஆண்டுக்கான ஆசிரியர் தின நிகழ்வும் அதே நேரத்தில் பாடசாலையில் கற்பித்து இடம் மாற்றம் பெற்று ஓய்வு பெற்றும் சென்ற ஆசிரியர்கள் அதிபர்கள் தொண்டர் ஆசிரியர்கள் ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றதுடன் சிறப்பக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு கெளரவிப்பும் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது 1973 தொடக்கம் தற்போதுவரை பாடசாலையில் கடமையாற்றிய சுமார் 300 ஆசிரியர்கள் குறித்த நிகழ்வில் கெளரவிக்கபட்டனர்.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயகல்விப்பணிப்பாளர் திரு.K.பிறட்லி அவர்களும் கெளரவ விருந்தினர்களாக முன்னால் வலய கல்வி பணிப்பாளர்களான திரு.ஆபேல் ரெவல் ஜனாப் M.M சியான் மற்றும் திருமதி.சுகந்தி செபஸ்ரியான் அவர்களும் விசேட விருந்தினர்களாக முன்னைனாள் அதிபர்களான திரு. ஜூட் பிகிறாடோ லியோன் ரெவல் அருட்சகோதரர் ஸ்ரணிஸ்லாஸ் மற்றும் அருட்சகோதரர் அகஸ்டீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பாடசாலையில் கல்வி கற்பித்து காலம் சென்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான விசேட திருப்பலியும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின விழாவும் விசேட கெளரவிப்பு நிகழ்வும்-படங்கள்
Reviewed by Author
on
October 30, 2019
Rating:

No comments:
Post a Comment