ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! கூட்டமைப்பு இன்று எடுத்த முடிவு -
பிரதான கட்சிகளினுடைய ஜனாதிபதி வேட்பாளர்களின் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 30ம் திகதி மீண்டும் பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் கூடி நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான ஐந்து தமிழ் கட்சிகள் கூடி அவர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய்வதாக இன்று தீர்மானம் எடுத்திருந்தனர்.
எனினும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்படும் கட்சிகள் இன்று பிற்பகல் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே.துரைரட்ணசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உறுப்பினர் ஜனார்தனன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்க தலைவர் சித்தார்த்தன உள்ளிட்டவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளனர்.
சந்திப்பு குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! கூட்டமைப்பு இன்று எடுத்த முடிவு -
Reviewed by Author
on
October 25, 2019
Rating:

No comments:
Post a Comment