தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எழுத்து மூல ஒப்பந்தம் கோருவது ஏமாற்று வேலை-முன்னாள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மன்னாரில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மாத்திரம் எழுத்து மூல ஒப்பந்தம், உடன்படிக்கை என கோருவது ஒரு ஏமாற்று வேலை எனவும் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் பற்றி பேச முதல் கலந்துரையாட முன்வர வேண்டும் என முன்னால் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோத்தாபாய ராஜபக்ஸவினை ஆதரித்து மன்னாரில் நடை பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாரு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர்கள் மாத்திரம் அல்ல தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த வரலாற்றில் எத்தனை பயணம் இவ்வாறான ஒப்பந்தங்கள் எழுதி எடுத்துள்ளனர் பண்டாரனாயக்கவுடம் மேற்கொண்டனர் அது கிழித்து போட்டபட்டது அது மட்டுமல்ல ஒரு காலத்தில் சந்திரிக்கா பாராளுமன்றத்தில் ஒரு வரைபை கொண்டுவந்தார் அதுவும் கிழித்துப்போடப்பட்டது அவ்வாறான எழுத்து மூல ஒப்பந்தம் மாத்திரம் போதுமா நம்பிக்கை தான் முக்கியமாக தேவை என தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்தவர்கள் இவ்வாறு கோருகின்றனர் 5 வருடம் பாத்துக்கொண்டு இருந்து விட்டு தேர்தல் வந்த பிறகுதான் இந்த எழுது கதை வருகின்றது ஏன் இதற்கு முதல் 5 வருட காலப்பகுதியில் ஒப்பந்ததை பற்றி தோணவில்லை என கேள்வி எழுப்பியதுடன் இது ஏமாற்றுவதற்கான ஒரு வேலை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் அந்த எழுத்து மூல ஒப்பந்தத்தில் என்ன கோருகின்றார்கள் என்பது தெரியாமல் நாங்கள் எவ்வாறு தீர்மானிப்பது முதலில் கலந்துரையாடல் நடத்த முன்வரட்டும் அதன் பின்னர் மற்றவற்றை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ தமிழ் மக்களின் மிகப் பெரிய ஆதரவு தேவை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர்களுக்கு தேசிய ரீதியில் ஆதரவு இல்லை எனவும் அவர்கள் மக்களுக்கு விரோதமாக செயற்படுவதால் கோத்தாபாய ராஜபக்ஸ நிச்சயம் வெற்றிபெருவார் எனவும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
October 02, 2019
Rating:
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment