தேசிய ரீதியிலும் வடமாகாண ரீதியிலும் சிறந்த நூல் விருது பெற்ற அலுவாக்கரை நாவல்-படம்
வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இரு அமர்வுகளாக10/11--10/2019 இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்றிருந்தன.
வட மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நடத்தப்பட்தோடு
மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் I.M.கனீபா,மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,பிரதேச செயலாளர் கா.உதயராசா,பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.
முதல் நாள் நிகழ்வு
- இளங்கலைஞர் விருது-2019
 - கலை மன்றங்களுக்கிடையிலான போட்டி விருதுகள்
 - கலைநிகழ்வுகள்
 
- சிறந்த நூல் பரிசும் விருதும்
 - கலைநிகழ்வுகள்
 - கலைக்குரிசில் விருதும் வழங்கப்பட்டது
 
- 20.10.2019 கொழும்பு மவுன் லேர்னியா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற சாஹித்திய விருது பெற்ற தமிழ் சிங்கள ஆங்கில எழுத்தாளர்கள் கெப்டன் எல்மோ ஜெயவர்தன இலக்கிய குழுமத்தால் கெளரவிக்கப்பட்டார்கள். தமிழ் நாவல் இலக்கியம் சார்பில் திரு.S.A.உதயன் அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டதும் சிறப்பு
 
தேசிய ரீதியிலும் வடமாகாண ரீதியிலும் சிறந்த நூல் விருது பெற்ற அலுவாக்கரை நாவல் இவரின் மேலும் 06 நாவல்கள் கடந்த காலங்களில் தேசிய ரீதியிலும் வடமாகாண ரீதியிலும் சிறந்த நூல் விருது பெற்றிருப்பது சிறப்பம்சமாகும் நாவலில் தொடர்ச்சியாக விருதுகளைப்பெற்று மன்னாரின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் தேசிய கலைஞர் திரு.S.A.உதயன் அவர்களுக்கு
நியூ மன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்
தொகுப்பு -கலைச்செம்மல் வை.கஜேந்திரன்BA-
தேசிய ரீதியிலும் வடமாகாண ரீதியிலும் சிறந்த நூல் விருது பெற்ற அலுவாக்கரை நாவல்-படம்
 
        Reviewed by Author
        on 
        
October 26, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 26, 2019
 
        Rating: 




No comments:
Post a Comment