உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சுர்ஜித் தொடர்பில் வெளியான இறுதி அறிவிப்பு!
கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகவே சுர்ஜித் மீண்டு வரவேண்டும் என பலரும் பிரார்தனை செய்து வந்த நிலையில், சுர்ஜித்தின் மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சற்று முன்னர் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது!
திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், இன்றிரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், நீண்ட நேர போராட்டத்தின் பின் சுர்ஜித்தின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில், சுர்ஜித் சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 2.30 மணியளவில் சுர்ஜித்தின் மரணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுவன் சுர்ஜித்தின் மரணம் பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சுர்ஜித் தொடர்பில் வெளியான இறுதி அறிவிப்பு!
Reviewed by Author
on
October 29, 2019
Rating:
Reviewed by Author
on
October 29, 2019
Rating:


No comments:
Post a Comment