கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு! வெளியாகியுள்ள தகவல் -
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கூட்டமைப்பின் தீர்மானத்தை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டாம் என்கிற கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவரிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு! வெளியாகியுள்ள தகவல் -
Reviewed by Author
on
October 23, 2019
Rating:

No comments:
Post a Comment