மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா-- படங்கள்
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இயேசுகிறிஸ்த்து பிறப்பு விழாவினை முன்னிட்டு திருமகன் திருவிழா எனும் பொருளில் ஒளி விழா நிகழ்வு சனிக்கிழமை 23/11/2019 மதியம்12-30 மணியளவில் பொது மண்டபத்தில் கல்லூரி முதல்வர் ஜனாப் M.Y.மாஹிர் அவர்களின் தலைமையில் கிறிஸ்த்தவ ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் ஏனையாஆசிரியர்களின் மற்றும் மாணவ மாணவிகளின் பங்குபற்றுதலோடு ஒளிவிழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரி முதல்வர் ஜனாப் M.Y.மாஹிர் அவர்களின் தனதுரையில் பாடசாலைகளில் நடைபெறுகின்ற இவ்வாறான சமய நிகழ்வுகளின் மூலம் ஒவ்வொரு சமயங்களினது சமயத்தவர்களினதும் பற்றிய புரிதலும் தெரித்லும் மாணவர்களிடையே நல்ல விழுமியங்களையும் பண்பினையும் வளர்த்துக்கொள்வதற்கு வழியமைக்கின்றது.
தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசுகளினை கல்லூரி முதல்வர் ஜனாப் M.Y.மாஹிர் அவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் வழங்கி வைத்தனர் மாணவர்களின் நடனம் பேச்சு கரோல்கீதம் ஆசிர்யர்களின் பாடல் கரோல்கீதம் இனிமையான நிகழ்வுகளாக அமைந்தது.
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா-- படங்கள்
Reviewed by Author
on
November 25, 2019
Rating:

No comments:
Post a Comment