வியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா -
இது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்று Nature Astronomy பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈரோப்பாவின் மேற்பரப்பலிருந்து ஆவி நிலையில் நீர் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் திரவ நிலையில் நீர் இருப்பதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என நாசா விஞ்ஞானியான Lucas Paganini என்பவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாசாவின் கலிலியோ விண்வெளி ஓடத்தின் உதவியுடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே ஈரோப்பாவில் மின்னைக் கடத்தக்கூடிய திரவம் ஒன்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு ஒன்றும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு குளிர்ந்த நிலவான ஈரோப்பாவினை நாசா நெருங்கி ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா -
Reviewed by Author
on
November 24, 2019
Rating:

No comments:
Post a Comment