சமூக வலைத்தளங்களுக்கு தடை இல்லை!
எதிர்வரும் நாட்களில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
வி.பி.என் (VPN) ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அது பொய். அப்படி ஒன்றும் இல்லை. எனினும், அந்த நிலைக்கு எம்மை கொண்டுச்செல்ல வேண்டாம்.
சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டுள்ள விளம்பரங்களை நீக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இடம்பெறும் மத நிகழ்வுகளின் போது, வேட்பாளர்கள் தொடர்பில் கூற வேண்டாம்.
எவ்வாறாயினும், மகிழ்ச்சிக்குரிய விடயம் ஒன்று உள்ளது. நகம் வெட்டியதாக கூட ஒரு முறைப்பாடும் பதிவாகவில்லை. தூற்றி அச்சுறுத்திய சம்பவங்கள் மாத்திரமே தேர்தல் வன்முறைகளாக பதிவாகியுள்ளது என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களுக்கு தடை இல்லை!
Reviewed by Author
on
November 14, 2019
Rating:

No comments:
Post a Comment