2020 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு -
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் 2020 ஜனவரி மாதம் 17ம் திகதி தொடங்கி பிப்ரவரி 9ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில், 2018 சாம்பியன் இந்தியா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, நைஜீரியா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் மற்றும் ஸ்காட்லாந்து என 16 அணிகள் பங்கேற்கின்றன.
16 அணிகள் ஏ, பி, சி மற்றும் டி என பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடைபெறும். இதுவரை 12 முறை நடைபெற்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா அதிகபட்சமாக நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய 3, பாகிஸ்தான் 2, இங்கிலாந்து 1, தென் ஆப்பிரிக்கா 1, மேற்கிந்திய தீவுகள் 1 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியாம் கார்க் (அணித்தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, துருவ் சந்த் ஜூரெல் (துணை தலைவர் மற்றும் விக்கெட் கீப்பர்), சஷ்வத் ராவத், திவ்யான்ஷ் ஜோஷி, சுபாங் ஹெக்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங் , கார்த்திக் தியாகி, அதர்வா அங்கோலேகர், குமார் குஷாகிரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பாட்டீல்.
2020 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு -
Reviewed by Author
on
December 02, 2019
Rating:

No comments:
Post a Comment