31 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு..!
மேற்கு ஆப்பரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள இராணுவத் தளம் மற்றும் நகரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 35 பேரில் 31 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலை இஸ்லாமிய ஜிகாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 100-ற்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.வடக்கு சூம் மாகாணத்தின் அர்பிண்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் ஏழு வீரர்கள் மற்றும் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று உள்ளுர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் மேற்கு ஆபிரிக்க நாட்டில் இரண்டு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்தார். இதுவரை தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்பதாக கூறவில்லை.
தாக்குதல் பல மணி நேரம் நீடித்தது என்று புர்கினா பாசோவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
தங்களுடனான மோதலில், பயங்கரவாதிகள் கோழைத்தனமாக 31 பெண்கள் உட்பட 35 பொதுமக்களைக் கொன்றனர், மேலும் 6 பேர் காயமடைந்தனர் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரெமிஸ் டான்ட்ஜினோ மேற்கோளிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் கிழக்கில் ஒரு தேவாலயத்திற்குள் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். புர்கினா பாசோவில் 2015 முதல் ஜிகாதி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் உருவான கிளர்ச்சி மற்றும் மாலியில் ஜிகாதிகள் வெளியேறியதன் காரணமாக புர்கினா பாசோ, கடுமையான அமைதியின்மைக்கு உள்ளாகியுள்ளது.
புர்கினா பாசோவில் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
2012ல் மாலியில் இருந்து பிரான்ஸ் படைகள், இஸ்லாமிய போராளிகளை வெளியேற்றுவதற்கு முன்னர், அவர்கள் புர்கினா பாசோவின் வடக்கே கைப்பற்றியது முதல் எல்லையில் இருந்து இந்த மோதல் பரவியது.
31 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு..!
Reviewed by Author
on
December 26, 2019
Rating:

No comments:
Post a Comment