இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது மோடி அரசு! போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின் -
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக மாவட்ட அளவில் போராட்டம் நடத்த திமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். இதன்படி எதிர்வரும் 17ம் திகதி குறித்த போராட்டம் இடம்பெறும் எனவும், அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தம் அண்மையில், லோக்சபை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக உள்ளிட்ட தேசியக் கட்சிகள் சில ஆதரவு வழங்கியிருந்தன.
எனினும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான, மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜக அரசுக்கு துணை நின்று, சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது.
மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இந்நிலையில், சிறுபான்மையினர் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ள பாஜக, மற்றும் அதிமுகவை கண்டித்து எதிர்வரும் 17ம் திகதி மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது மோடி அரசு! போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின் -
Reviewed by Author
on
December 13, 2019
Rating:

No comments:
Post a Comment