வணிகத்துறையில் முல்லைத்தீவு மாணவி சாதனை! -
2019ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
வெளியாகியுள்ள நிலையில் வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவி இரவிச்சந்திரன் யாழினி சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியே இவ்வாறு வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையிலேயே இவ்வாறு சாதித்துள்ளார்.
குறித்த மாணவியையும், இவருடைய தாயாரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
வணிகத்துறையில் முல்லைத்தீவு மாணவி சாதனை! -
Reviewed by Author
on
December 28, 2019
Rating:

No comments:
Post a Comment