ரொரன்ரோவில் மூன்று நாட்களாக தமிழ்ப்பெண் மாயம்! புகைப்படத்துடன் வெளியான தகவல் -
இது தொடர்பான தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பொலிசார் சமூகவலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீசக்தி குமாரசாமி என்ற 53 வயது பெண் கடந்த 15ஆம் திகதியில் இருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 15ஆம் திகதி பகல் 12.30 மணிக்கு கடைசியாக ஸ்ரீசக்தி Finch Av + Tapscott Rd பகுதியில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீசக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான போது ஸ்ரீசக்தி கருப்பு நிற கோட், கருப்பு நிற ஷூ மற்றும் சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தார்.
ஸ்ரீசக்தி குறித்து தகவல் தெரிந்தால் பொலிசரை அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரொரன்ரோவில் மூன்று நாட்களாக தமிழ்ப்பெண் மாயம்! புகைப்படத்துடன் வெளியான தகவல் -
Reviewed by Author
on
December 18, 2019
Rating:

No comments:
Post a Comment