என்னை மாற்றிய அந்த தருணம்!... எடையை குறைத்தது ஏன்? டி.இமானின் பதில்
அவர் அளித்த பதிலில், நண்பர்கள், உறவினர்கள் சில சமயங்களில் என்னுடைய எடை குறித்து கேலி செய்வார்கள். உடல் அதிகமாக இருப்பது எல்லா விதங்களிலும் சிரமமாக இருந்தது.
விமான இருக்கையில் துவங்கி பல பிரச்சனை இருந்தது. ஆனால், எனக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு, என் தாயாரின் மரணம். அவர் மிக குண்டாக இருந்தார். அதனால், நீரிழிவு நோய் இருந்தது. இதையடுத்து சிறுநீரகம் செயல் இழந்தது. அது எனக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியது.
தவிர, நேரடி நிகழ்ச்சிகளை நடத்தும்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தால் எனக்கே கஷ்டமாக இருந்தது. நம் பாடலைக் கேட்கத்தான் வருகிறார்கள் என்றாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டாமா என்று நினைத்தேன். அதனால்தான் உடல் எடையைக் குறைக்க முடிவுசெய்தேன் என தெரிவித்துள்ளார்.
என்னை மாற்றிய அந்த தருணம்!... எடையை குறைத்தது ஏன்? டி.இமானின் பதில்
Reviewed by Author
on
December 02, 2019
Rating:

No comments:
Post a Comment