பிரித்தானியா மகாராணி அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் கிறிஸ்துமஸ் பரிசு? என்ன தெரியுமா?

மகாராணியின் தாத்தா George V போர் துவங்குவதற்கு முன்பே கிறிஸ்துஸ் பண்டிகைக்காக அரண்மனை ஊழியர்களுக்கு பரிசு கொடுத்துள்ளார்.
இந்த பாரம்பரியம் அப்படியே பின்பற்றப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அதே போன்று அரண்மனையில் வேலை பார்க்கும் 1500 ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்க மகாராணி முடிவு செய்துள்ளாராம், இவை அனைத்துமே மகாரணி தன்னுடைய தனிப்பட்ட முறையில் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இதனால் ஊழியர்கள் மகாரணியின் பரிசு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று மகாராணி தன்னுடைய ஊழியர்களுக்கு 6 பவுண்ட் மதிப்பு கொண்ட டெஸ்கோ கேக் கொடுக்கவுள்ளதாகவும், அதிக ஆண்டுகள் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 35 பவுண்ட் மதிப்பு கொண்டு பரிசு கூப்பன் கொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதை மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
பிரித்தானியா மகாராணி அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் கிறிஸ்துமஸ் பரிசு? என்ன தெரியுமா?
Reviewed by Author
on
December 19, 2019
Rating:
Reviewed by Author
on
December 19, 2019
Rating:

No comments:
Post a Comment