கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
அவற்றில் முக்கியமானவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தபோக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.
அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாக உள்ளது.
சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
Reviewed by Author
on
December 09, 2019
Rating:
Reviewed by Author
on
December 09, 2019
Rating:


No comments:
Post a Comment